மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

யாழில் பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 10 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்ட நபருக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், தெல்லிப்பழை – மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே சங்கானையை சேர்ந்த ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி 13 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

சந்தேகநபர் தலைமறைவு

இந்நிலையில், அவரை பிரான்ஸிற்கு அனுப்பாத நிலையில் 3 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்ததுடன் 10 இலட்சம் ரூபா இன்னமும் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி | Scam Of Lakhs In Jaffna Claiming To Be Sent Abroad

பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

சந்தேகநபர் தலைமறைவாகிய நிலையில் பொலிஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date