மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

பிரான்சுநாட்டில் முதன்முதலாக அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.06.2025 சனிக்கிழமை பொண்டி நகரில் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர்.
மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த அனைத்துலக தaமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.தேர்வினை மேற்பார்வை செய்ய அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சார்பில் மதிப்பிற்குரிய சர்வேஸ்வரி ஆசிரியை கலந்து கொண்டிருந்தமை சிறப்பிற்குரியதாகும்.
தேர்விற்குரிய மண்டபத்தை தந்துதவிய பொண்டி நகர சபைகும் அதற்கு வழிவகைசெய்த அந்த பகுதி தமிழ்ச்சங்கத்திற்கும் தமிழ்ச்சோலை தலைமைச் செயலகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் .அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சார்பில் தமிழர் புலம்பெயர்ந்துள்ள தேசங்கள் முழுவதும் ஒரே நாளில் நடைபெற்ற ஒரே முறையிலான இத்தேர்வில் முதன்முதலாக பிரான்சில் இம்முறை மாணவர்கள் தேர்வினை தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிட தக்கது .இத்தேர்வு ஆனது எதிர்வரும் கல்வியாண்டில் இன்னும் பல புதிய மாணவர்கள் தமிழ் மொழியினைக் கற்று தேர்வினை தோற்றுவதற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது .தமிழால் இணைவோம் .புது நிமிர்வாய் எழுவோம்
 

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date