மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

டொரொண்டோவில் கடும் புயல் எச்சரிக்கை

டொரொண்டோ நகரத்திற்கு கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் வெளியிட்ட எச்சரிக்கையில், மழை, ஆலங்கட்டி மழை மற்றும் மரங்களையும் வாகனங்களையும் பாதிக்கக்கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. மெதுவாக நகரும் மழை மற்றும் இடியுடன் கூடிய மேகங்கள், இவ்வேளையில் கனமழையை கொண்டுவந்திருக்கின்றன.   ஆலங்கட்டி தர மற்றும் பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 50 மில்லிமீட்டர் […]

பிரான்சில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவு நிகழ்வும் “தேசத்தின் குரல்” சிலைக்கான நினைவுக்கல் நாட்டும் நிகழ்வும்

தமிழீழ மக்களின் விடுதலைக்காக இராஜதந்திர ரீதியில் பெரும் பங்களிப்புச் செய்த மூத்த இராஜதந்திரியாகவும் தமிழீழ மக்களுக்கான தலைமை அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவும் தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அவர் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்தவர் “தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் . இவருடைய நினைவாக பிரான்சின் பாரிஸ் புறநகர்களின் ஒன்றான bondy என்ற நகரில் உள்ள நகரபூங்காவான Parc de la Mare à la Veuve கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிலையை நிறுவுவதற்கான அனுமதியை […]

டொனால்டு ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல்

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர். இதையடுத்து, […]

பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை

பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025; ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இன்னியம் இசையுடன் அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு விளக்கினை பிரான்சு ரிரிஎன் இணைப்பாளர் திரு. ஜெயா , பிரான்சு கிளையின் செயற்பாட்டாளர் திருவாட்டி சுபா மோகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். பின்னர் அகவணக்கம் […]

சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025

பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 66 தமிழ்ச்சோலைகளில் பயில்வோர், மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியிருந்தனர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது […]

அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

பிரான்சுநாட்டில் முதன்முதலாக அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.06.2025 சனிக்கிழமை பொண்டி நகரில் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த அனைத்துலக தaமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.தேர்வினை மேற்பார்வை செய்ய அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் […]

பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு […]

பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 கவனயீர்ப்பு பதாகைகள்!

இன்று 17.05.2025 சனிக்கிழமை பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டினை நினைவில் ஏந்தி அதன் அடையாள சின்னத்தைத் தாங்கிய பதாகைகளை வைத்து கவனயீர்ப்பு நினைவேந்தப்படுகிறது. .மே18 அன்று மதியம் 13.30 மணிக்கு இன உணர்வு கொண்ட தமிழ் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி நீதிக்கான பேரணியில் பங்குபற்றவும் உள்ளனர்.

கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழா தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை விழா – 2025

யேர்மன் நாட்டில் புகழ்பெற்ற நறுமணநீர் நகர் கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழாவைப் பெருவிழாவாகப் பேரவை விழா – 2025 இனை மே மாதம் 3ம் நாள் நடத்திச் சிறப்பித்துள்ளனர் யேர்மன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். மண்டப வாயிலில் மலர்க்கோலம் இடப்பட்டு, மேசை மீது பித்தளையாலான சிலைகள், நிறைகுடம், விளக்குகள் எனப் பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டு, மலர்களும் பழங்களும் அலங்கரிக்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நின்றது […]