மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை

லண்டன்: நான்கு இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரிட்டனால் சமீபத்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை விதிக்கக் கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) பிரிட்டிஷ் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திடம் (Foreign, Commonwealth & Development Office – FCDO) ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (Major General Kamal Gunaratne) […]
தவபாலன் அண்ணையின் மகனின் வரிகள்…

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார் என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது.நானும் அம்மாவும் வெளியில் வந்தோம்.”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ” தாளச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன்.இது வரை காலமும் ஒரு சொட்டு கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண்கள் அன்று அழுதது.இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து […]
உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

[fvplayer id=”2″]முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டதன் பின்னர் அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றிவைக்கப்பட்ட பின்னர் சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது. [fvplayer id=”4″]
குருந்தூர்மலை விவசாயிகள் கைது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று (மே 15) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. இந்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றது. புகாரில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு

இன்றய நாளில் (17.05.2025) மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் மகேந்திரம் ஸ்ரோர்ஸ் அவர்களின் ஒத்துழைப்புடனும் இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது . விடுதலைப்போரில் மரணித்த அத்தனை உறவுகளுக்காகவும் அகவணக்கம் செய்ததோடு நினைவுப் படத்திற்கான மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டது தொடர்ந்து மக்களால் மலர் அஞ்சலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் திரு.வேழமாளிகிர்தன் அவர்களால் நினைவுரை ஆற்றப்பட்டது தொடர்ந்து கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. எத்தனை […]
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இன்று (17.05.2025) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாகாகப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் என்போர் கலந்துகொண்டனர்.
கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான இளம் வர்த்தகர்

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக […]
ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் யாழ்.சாவகச்சேரியில் ஆபத்தான நிலையில்!

யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது. ஆபத்தான நிலை இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.