தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கைது

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தார். நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனத்தில் நடந்த துப்பாக்கிச் […]
நல்லூரில் வாள் வெட்டு – இளைஞன் காயம் – ஐவர் கைது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அந்நிலையில் , வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி […]
தேரர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு அபே ஜனபல கட்சியின் பொதுச் செயலாளரைக் கடத்தி அச்சுறுத்தி அக்கட்சிக்கு உரித்தான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த வழக்கில் முன்னிலையாகாமல் அதுரலியே ரத்ன தேரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார். இதனையடுத்து […]
இராணுவ முகாம் அகற்றலுக்கு விடுதலை புலிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் “மக்கள் பாதை” என்ற தொனி பொருளில் இராணுவ முகாம்கள் அகற்ற முன்னெடுக்கப்பட்ட செயற்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றிய அவர், “மக்கள் வாழும் பகுதியில் இராணுவ முகாம்களை அமைப்பது சட்டவிரோதமானது என்கிறார் சுமந்திரன். இராணுவ முகாம்கள் […]
புலிகள் கால பாணியில் அகற்றப்படும் இராணுவ முகாம்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பிரபாகரனின் ” மக்கள் பாதை” என்ற தொனிப்பொருளில் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் செயற்பாடு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது போல் தோன்றுவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, அன்று அதற்கு பின்னால் நின்றவர் பிரபாகரன் இன்று யார் இருக்கிறார் என்று தெரியாது என்றும் கம்மன்பில கூறியுள்ளார். […]
அடுத்த வாரங்களுக்குள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பறிமுதல் செய்ய நடவடிக்கை

அடுத்த வாரங்களுக்குள் 2 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான தெமட்டகொட ருவான் மற்றும் கரந்தெனியே சுத்தா ஆகியோருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிற சொத்துக்கள் உட்பட போதைப்பொருள் கடத்தல் மூலம் ஏராளமான பணம் வருமானமாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சொத்துக்கள் பறிமுதல் அதற்கமைய, அவர்களுக்கு […]
இரண்டாம் இடத்தை தனதாக்கிய யாழ்ப்பாணத்தின் மைந்தன் புஷாந்தனை வாழ்த்துவோம்

ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய, பசுபிக் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குடையிலான பளுதூக்கல் போட்டியில் 832.5 kg (Over Roll) பளுவைத் தூக்கி இலங்கைக்கான புதிய சாதனையுடன் இரண்டாம் இடத்தை தனதாக்கிய யாழ்ப்பாணத்தின் மைந்தன் புஷாந்தனை வாழ்த்துவோம்
அமெரிக்கா செல்லும் அநுரவின் குழு

அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட, உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவுக்குப் புறப்பட உள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜா, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர். இந்த முயற்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய வரி கடிதத்துக்கு பின்னர், வர்த்தக […]
யாழில் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – செம்மணியில் வெடித்த மக்கள் போராட்டம்!

யாழ் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1998-1999 இல் செம்மணி பகுதியில் 300க்கு […]