கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான இளம் வர்த்தகர்

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக […]
ஊசி மூலம் போதைப் பொருள் ஏற்றியவர் யாழ்.சாவகச்சேரியில் ஆபத்தான நிலையில்!

யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப் பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞன் போதைப் பொருளை ஊசி மூலம் தொடர்ச்சியாக பாவிப்பவர் என தெரியவருகின்றது. ஆபத்தான நிலை இந்நிலையில் இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிய நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார். பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.