மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

இரண்டாம் இடத்தை தனதாக்கிய யாழ்ப்பாணத்தின் மைந்தன் புஷாந்தனை வாழ்த்துவோம்

ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய, பசுபிக் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்குடையிலான பளுதூக்கல் போட்டியில் 832.5 kg (Over Roll) பளுவைத் தூக்கி இலங்கைக்கான புதிய சாதனையுடன் இரண்டாம் இடத்தை தனதாக்கிய யாழ்ப்பாணத்தின் மைந்தன் புஷாந்தனை வாழ்த்துவோம்

அமெரிக்கா செல்லும் அநுரவின் குழு

அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட, உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்காவுக்குப் புறப்பட உள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக அமைச்சின் செயலாளர் விமலேந்திரராஜா, ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க ஆகியோர் இந்த குழுவில் இடம்பெறவுள்ளனர். இந்த முயற்சி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய வரி கடிதத்துக்கு பின்னர், வர்த்தக […]

யாழில் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – செம்மணியில் வெடித்த மக்கள் போராட்டம்!

யாழ் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1998-1999 இல் செம்மணி பகுதியில் 300க்கு […]

மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை

லண்டன்: நான்கு இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரிட்டனால் சமீபத்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை விதிக்கக் கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) பிரிட்டிஷ் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திடம் (Foreign, Commonwealth & Development Office – FCDO) ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (Major General Kamal Gunaratne) […]

தவபாலன் அண்ணையின் மகனின் வரிகள்…

அன்று மே மாதம் 15ம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை மதியம் ஒரு 12மணி இருக்கும்.அப்பா நாங்கள் இருந்த கூடாரத்தை நோக்கி வந்தார் என்றுமில்லாதவாறு அன்று அவருடைய முகம் இருந்தது.நானும் அம்மாவும் வெளியில் வந்தோம்.”எல்லாம் முடிஞ்சிட்டு நான் வரமாட்டன் நீங்க போங்கோ” தாளச் சோகத்தில் கதறி அழுது அப்பாவை அணைத்தேன்.இது வரை காலமும் ஒரு சொட்டு கண்ணீரையும் பாத்திராத அவருடைய கண்கள் அன்று அழுதது.இறுதியாக அப்பா விடைபெற நடைபிணங்களாக மாறிய நாங்கள் சரணடைவுக்காக வட்டுவாகல் நோக்கி நடக்க ஆரம்பித்து […]

உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

[fvplayer id=”2″]முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம் மிகவும் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. முதலில் முள்ளிவாய்க்கால் கொள்கை பிரகடனம் வாசிக்கப்பட்டதன் பின்னர்  அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்  தொடர்ந்து காலை 10.31 மணியளவில் பொதுச் சுடர்  ஏற்றிவைக்கப்பட்ட பின்னர்  சமநேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. உயிர்நீத்தவர்களின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.   [fvplayer id=”4″]

குருந்தூர்மலை விவசாயிகள் கைது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று (மே 15) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. இந்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றது. புகாரில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு

இன்றய நாளில் (17.05.2025) மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் மகேந்திரம் ஸ்ரோர்ஸ் அவர்களின் ஒத்துழைப்புடனும் இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது . விடுதலைப்போரில் மரணித்த அத்தனை உறவுகளுக்காகவும் அகவணக்கம் செய்ததோடு நினைவுப் படத்திற்கான மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டது தொடர்ந்து மக்களால் மலர் அஞ்சலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் திரு.வேழமாளிகிர்தன் அவர்களால் நினைவுரை ஆற்றப்பட்டது தொடர்ந்து கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. எத்தனை […]

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இன்று (17.05.2025) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாகாகப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் என்போர் கலந்துகொண்டனர்.