மதுரையைக் குறிவைக்கும் பாஜக.. முக்கியமான இரண்டு தொகுதிகளுக்கு டார்கெட்?

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அதுமட்டுமின்றி அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அதிகளவில் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியை சார்ந்த பாஜக துணைத்தலைவர் தமிழ்மணி, கலா, ராஜலட்சுமி உள்ளிட்டோரையும், மாநிலகக்குழு உறுப்பினர் மலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் மாலைக்கொடி, […]
4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார் . கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் […]