கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது-ஏர் மகாராசன்

கல்விச் செயல்பாடுகள் குறித்த கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக, ஆசிரியர்களிடமோ அல்லது கல்வியாளர்களிடமோ கருத்தேதும் கேட்காமல் தான்தோன்றித் தனமாய் அறிவிப்பது சரியாக இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. * வகுப்பறைகளில் ப வடிவில் மாணவர்களை அமர வைப்பது என்னும் முடிவு குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் பதிவுகள் நிறைய. கடைசி வரிசையில் அமர்கிறவர்கள் எல்லாம் கல்வியில் பின்தங்கியவர்கள் என்று பொருளாகாது என்கிறார் ஷோபனா. இருக்கலாம். ஆனால், last benchers என்பது உலகளாவிய விஷயம். மாணவர்களை ஆசிரியரே கடைசி […]
தவெக நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழ்நாட்டு அரசியலில் மிக முக்கியமான ஒன்று.. ஏன்?

திமுக ஆட்சி ‘சாரி மா மாடல் ஆட்சி’ ஆகிவிட்டதாக விமர்சித்துள்ள தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு அஞ்சி ஒன்றிய ஆட்சிக்கு பின்னால் திமுக ஒளிந்துகொள்வதாக சாடியுள்ளார். காவல் நிலைய மரணங்களை கண்டித்து சென்னையில் தவெக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய விஜய், “இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்கு கொடுத்த நிவாரணம் போல, இதே ஆட்சியில் நிகழ்ந்த 24 இளைஞர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்கள். சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ-க்கு மாற்றியபோது, அது தமிழ்நாட்டு காவல்துறைக்கு அவமானம் என்றீர்கள். இன்று நீங்கள் […]
மதுரையைக் குறிவைக்கும் பாஜக.. முக்கியமான இரண்டு தொகுதிகளுக்கு டார்கெட்?

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அதுமட்டுமின்றி அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அதிகளவில் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியை சார்ந்த பாஜக துணைத்தலைவர் தமிழ்மணி, கலா, ராஜலட்சுமி உள்ளிட்டோரையும், மாநிலகக்குழு உறுப்பினர் மலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் மாலைக்கொடி, […]
4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்!

18 மசோதாக்கள் அனுப்பப்பட்டதில் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார் . கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர் என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக கவர்னரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்ட திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருக்கிறார். 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் […]