பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை

பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025; ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இன்னியம் இசையுடன் அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு விளக்கினை பிரான்சு ரிரிஎன் இணைப்பாளர் திரு. ஜெயா , பிரான்சு கிளையின் செயற்பாட்டாளர் திருவாட்டி சுபா மோகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். பின்னர் அகவணக்கம் […]
சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025

பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 66 தமிழ்ச்சோலைகளில் பயில்வோர், மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியிருந்தனர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது […]
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

பிரான்சுநாட்டில் முதன்முதலாக அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.06.2025 சனிக்கிழமை பொண்டி நகரில் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த அனைத்துலக தaமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.தேர்வினை மேற்பார்வை செய்ய அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் […]
பிராங்கோ தமிழ்ச்சங்கதின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 16ஆவது ஆண்டு

பிரான்சு 93 மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் அதிகம் வாழும் பொபினி என்னும் மாநகரத்தில் இன்று 17.05.2025 காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 16ஆவது ஆண்டு பிராங்கோ தமிழ்ச்சங்கதின் ஏற்பாட்டில் மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர், துணை முதல்வர் பொதுச்சுடர் ஏற்றி வைக்க பொதுமக்கள்,இளையவர்கள், சிறியவர், பெரியோர், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டு மீண்ட குடும்பங்கள் இன அழிப்புக்கு உள்ளான மக்களுக்காக சுடர் ஏற்றி, மலர் கொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர்.
கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழா தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை விழா – 2025

யேர்மன் நாட்டில் புகழ்பெற்ற நறுமணநீர் நகர் கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழாவைப் பெருவிழாவாகப் பேரவை விழா – 2025 இனை மே மாதம் 3ம் நாள் நடத்திச் சிறப்பித்துள்ளனர் யேர்மன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். மண்டப வாயிலில் மலர்க்கோலம் இடப்பட்டு, மேசை மீது பித்தளையாலான சிலைகள், நிறைகுடம், விளக்குகள் எனப் பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டு, மலர்களும் பழங்களும் அலங்கரிக்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நின்றது […]