பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கம் வரை காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க வலுவான புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜித வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு செலுத்தும் அலுவலகத்தின் செயல்முறை கடந்த காலங்களில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தையும் நிறைவேற்றுவதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.