மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

செல்வச் சந்நிதியான் மகோற்சவம் – விசேட அறிவிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் , ஆலய சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல்களை வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் விடுத்துள்ளார்.

அவையாவன, 1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்பு கடைகள்,மிக்சர் கடைகள்,ஐஸ்கிறீம் கடைகள்,கருஞ்சுண்டல்,தும்புமிட்டாய்,ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி சபைகளின் நடப்பாண்டிற்கான வியாபார அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.

2. உணவு கையாளும் நிலையங்களில் கடமைபுரிபவர்கள் மற்றும் அன்னதான மடங்களில் கடமை புரிபவர்கள் அனைவரும் நடப்பாண்டிற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருப்பதுடன் தனிநபர் சுகாதாரம் பேணுவதனை உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் தற்காலிக கடமையில் ஈடுபடுபவர்கள் தற்காலிக மருத்துவ சான்றிதழ் பெற வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச் சுகாதார பரிசோதகரினை தொடர்பு கொள்ளவும்.

3. தண்ணீர்ப்பந்தல்கள், சர்பத் கடைகள் மற்றும் ஐஸ்கிறீம் கடைகள் நடாத்துபவர்கள் அனுமதி பெறப்பட்ட கடைகளில் நீர்ப்பரிசோதனை அறிக்கை வைத்திருப்பவர்களிடம் இருந்து ஐஸ்கட்டிகளை கொள்வனவு செய்வதுடன் அதற்கான பற்றுச்சீட்டினையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.

4. ஆலயத்தினது சுற்றாடலில் புகையிலை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date