முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
அபே ஜனபல கட்சியின் பொதுச் செயலாளரைக் கடத்தி அச்சுறுத்தி அக்கட்சிக்கு உரித்தான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வழக்கில் முன்னிலையாகாமல் அதுரலியே ரத்ன தேரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார்.
இதனையடுத்து அவரைக் கண்ட இடத்தில் கைது செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.