தமிழீழ மக்களின் விடுதலைக்காக இராஜதந்திர ரீதியில் பெரும் பங்களிப்புச் செய்த மூத்த இராஜதந்திரியாகவும் தமிழீழ மக்களுக்கான தலைமை அமைதிப் பேச்சுவார்த்தையாளராகவும் தமிழீழ மக்களின் அரசியல் குரலாக அவர் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்தவர்
“தேசத்தின் குரல்” கலாநிதி.அன்ரன் பாலசிங்கம் அவர்கள் .
இவருடைய நினைவாக பிரான்சின் பாரிஸ் புறநகர்களின் ஒன்றான bondy என்ற நகரில் உள்ள நகரபூங்காவான Parc de la Mare à la Veuve கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிலையை நிறுவுவதற்கான அனுமதியை bondy நகரசபை வழங்கியிருந்தது. இதற்கான அடிகல் நாட்டும் நிகர்வு 12/07/2025 அன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் bondy நகரின் மேயர் திரு.ஸ்டீபன் ஏர்வே மற்று நகரசபை உறுப்பினர்கள் கலந்து சிலைகான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.குறித்த நிகழ்வை பிரான்ஸை தளமாக இயங்கும் தமிழ்ப் பண்பாடு வலையம் பிரான்சு மற்று கார்த்திகை 27 சங்கம் ஆகிய இரண்டு அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்திருந்தனர் .