மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – செம்மணியில் வெடித்த மக்கள் போராட்டம்!

யாழ் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1998-1999 இல் செம்மணி பகுதியில் 300க்கு மேற்பட்ட  தமிழர்கள் பேரினவாத சிங்கள அரசின் வதை முகாமில்  இருந்து    காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்”

ஆனால்  இதுவரை தெளிவான, சட்டபூர்வமான விசாரணை நடக்கவில்லை ,  இதில் ஈடுபட்ட  சிங்கள  அரசின்   மீது  விசாரணை அமைத்து தண்டிக்கப்பட்டிருக்கவில்லை   என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date