யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பழைய மாண்வர் ஆசிரியர் சங்கம் ஏற்பாட்டில் 9வது திருநாவுக்கரசு சங்கமம் பிரான்சில் 26.10.2025 நடைபெறுவதையிட்டு மாபெரும் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன .இப்போட்டிகளில் பிரான்சில் உள்ள அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
சங்கத்தின் தலைவர் விமல் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது .மேலும் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகள் பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .கரம் மற்றும் சதுரங்கம் போட்டிகள் மூன்று பிரிவுகளாக ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெறும். விளையாட்டுத்துறையின் சட்ட விதிமுறைக்கமைய நடைபெறும் .ஓவியம்,திருக்குறள் போட்டிகள் மூன்று பிரிவுகளாக மட்டும் நடைபெறும்.என அறிவிக்கப்பட்டுள்ளதோடு வெற்றி பெறுபவர்களுக்கு பண பரிசில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.நல்வாய்ப்பு சீட்டிழுப்பும் நடைபெற உள்ளமை குறிப்பிட தக்கது .