மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழப்பு

விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம்  உயிரிழந்துள்ளார். கடந்த 27ஆம் திகதி இரவு அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக்கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர் இதன்போது, குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விசேட அதிரடிப் படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர். காயமடைந்த […]

இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினர் மீது குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்போதே, இஷாரா செவ்வந்தி டுபாய் நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இதுவரை நடைபெற்ற விசாரணையில் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டது தொடர்பாக பல உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, கெஹல்பத்தர […]

கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்-ஜனாதிபதி அநுர

கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இறுதியாக மதுரையில் நடந்த மாநாட்டில் உரையாற்றும் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக உரையாற்றியுள்ள ஜனாதிபதி அநுர, கச்சத்தீவை […]