செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்றையதினம்(25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்த நிலையில், குறித்த அகழ்வு பணிகளே இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழிகளில் முதல் கட்டமாக 9 நாளும் இரண்டாம் கட்டத்தில் 45 நாள் அகழ்வு செய்ய தீர்மானிக்கப்பட்டு இதுவரை 32 நாளும் என மொத்தமாக 41 […]
யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் (Thellippalai Sri Durga Devi Temple) வருடாந்த மகோற்சவம் இன்று (26) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகோற்சவ பெருவிழாவில் இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு […]
புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கு : நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நவம்பர் 6ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வழக்கு விசாரணையின் போது, மேன்முறையீட்டாளர்கள் சார்பில் முன்னியான வழக்கறிஞர், […]
பாகிஸ்தானும் ட்ரம்ப்பின் கூற்றுக்கு மறுப்பு

ஓபரேஷன் சிந்தூரில் போர்நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் விளக்கமளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி நடைபெற்ற பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மே 7ஆம் திகதி ஓபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை, இந்தியா பாகிஸ்தானில் மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும், ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலமாக தாக்கிக்கொண்டன. 4 நாட்களுக்கு […]
உக்ரைன் தனது சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடும்

உக்ரைன் தனது சுதந்திரத்திற்காக தொடர்ந்து போராடும் என்று அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நமக்கு ஒரு நீதியான அமைதி தேவை, நமது எதிர்காலத்தை நாம் மட்டுமே தீர்மானிக்கும் ஒரு அமைதி என்று அவர் கூறியுள்ளார். மேலும், உக்ரைன் ஒரு பாதிக்கப்பட்ட நாடு அல்ல, அது ஒரு போராளி நாடு என்றும் அவர் பெருமிதம் கொண்டுள்ளார். உக்ரைன் இன்னும் வெற்றி பெறவில்லை, ஆனால் அது நிச்சயமாக தோற்காது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்ய மின்சாரம் மற்றும் […]
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நடவடிக்கை அரசியல் ரீதியானது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நடவடிக்கை அரசியல் ரீதியானது என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார். இலங்கையில் உயர்நிலை பிரபுக்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தல் அல்லது நடைமுறைப்படுத்தாதிருத்தல் இரண்டுமே அரசியல் ரீதியான தீர்மானங்களின் அடிப்படையிலானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை மூடிமறைக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒட்டு மொத்த செயன்முறையும் அரசியல் ரீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிணை […]
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள்

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று பிற்பகல் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், ரணிலின் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் பரப்பில் பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வைத்தியசாலையில் […]