இந்தியாவிற்கு எதிரான ட்ரம்பின் வரி: கடுமையாக எதிர்க்கும் சீனா

இந்தியாவிற்கு (India) எதிரான அமெரிக்க (United States) வரியை எதிர்த்து நிற்கப்போவதாக சீனா (China) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்தியாவுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரியை எதிர்த்து நிற்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் (Xu Feihong) தெரிவித்துள்ளார். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், […]
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் பணி ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்பப்பாண மாவட்ட செயலகத்தின் கச்சேரி – நல்லூர் வீதியின் பக்கமாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கென பிரத்தியேகமான கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் நிர்மாண வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் ஒன்று […]
சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி

நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது இந்த நிலையில் குறித்த போராட்டம் தொடர்பில் இன்று (22) கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த் அறிவித்துள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் அறிக்கை அடுத்த மாத தொடக்கம் வரை காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க வலுவான புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் விஜித வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு […]
செல்வச் சந்நிதியான் மகோற்சவம் – விசேட அறிவிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் சனிக்கிழமை மதியம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 06ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் , ஆலய சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுச்சுகாதாரம் சார்ந்த பொது அறிவுறுத்தல்களை வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் விடுத்துள்ளார். அவையாவன, 1. உணவு கையாளும் நிலையங்கள் (உணவகங்கள், இனிப்பு கடைகள்,மிக்சர் கடைகள்,ஐஸ்கிறீம் கடைகள்,கருஞ்சுண்டல்,தும்புமிட்டாய்,ஏனையவை) தத்தமது உள்ளூராட்சி சபைகளின் […]