மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பல இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இரு குழுக்களுக்கு இடையே மோதல்-கொல்லப்பட்ட இளைஞன்

புத்தளம், கல்பிட்டியில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்தவர் உட்பட 5 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த கல்பிட்டியை சேர்ந்த 37 வயதுடைய நபராகும். குறித்த நபர் கல்பிட்டி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சடலம் சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் […]

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.   இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.   மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.   மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.   மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் […]

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் தொடரும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 19 கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் மாலை (17) ஆரம்பிக்கப்பட்ட வெலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார். தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்றும், இன்று தங்கள் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாகவும் சிந்தக பண்டார தெரிவித்தார். எனினும், […]

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் கைது

நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டார்.   கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (18) அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.   நாரஹேன்பிட்ட பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனத்தில் நடந்த துப்பாக்கிச் […]

மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ரயில் மறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (19) தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்..   மீனவர்களுடன் ராமேஸ்வரம் வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மணோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (18) நடைபெற்றது.   ஆனால் […]