மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

சதாசிவ_பண்டாரத்தார் அவர்களின் 133 ஆம் ஆண்டு அவதார நன்னாள் -16.09.2025

ஆதித்த கரிகாலசோழன் படுகொலை மர்மத்தை உடைத்த காட்டுமன்னார்கோயில் – உடையார்குடி கல்வெட்டை கண்டறிந்து தமிழ் உலகிற்கு தந்தவர்…! ஏழத்தாழ 8000 தமிழ் கல்வெட்டுகளை நேரடியாக படித்து ஆராய்ந்தவர்…! சோழ மன்னர்களின் முழுமையான வரலாற்றினை எழுதி வெளியிட்ட முன்னவர்…! வீரசோழப் பேரரசு மீண்டு எழ வழிவகுத்த #திருப்புறம்பியம்_பெரும்போர் என வரலாற்றாளர்களால் போற்றப்படும், அதி முக்கிய வரலாற்று போர் நடந்த திருப்புறம்பியம் கிராமத்தில் தோன்றியவர். “ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் உண்மை வரலாறு அதன் தாய் மொழியிலேயே எழுதப்படுதல் அவசியம்” […]

9வது திருநாவுக்கரசு சங்கமம் பிரான்சில் 26.10.2025 நடைபெறுவதையிட்டு மாபெரும் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள்

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பழைய மாண்வர் ஆசிரியர் சங்கம் ஏற்பாட்டில் 9வது திருநாவுக்கரசு சங்கமம் பிரான்சில் 26.10.2025 நடைபெறுவதையிட்டு மாபெரும் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன .இப்போட்டிகளில் பிரான்சில் உள்ள அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளுமாறு யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது . சங்கத்தின் தலைவர் விமல் தலைமையில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது .மேலும் நடைபெற உள்ள விளையாட்டு போட்டிகள் […]

ஜெலன்ஸ்கி – ட்ரம்ப் சந்திப்பு.. புதினுக்கு மெலனியா கடிதம்.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், உலக நாடுகள் உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

தூய்மைப்பணியாளர்கள் பணிநிரந்தரம் | திருமா, அதியமான் கருத்துக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு – ஏன்?

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று திருமாவளவன் மற்றும் அதியமான் கூறியுள்ள நிலையில் அதற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆகியோர் பேசியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. தூய்மைப்பணியாளார்களை பணிநிரந்தரம் செய்யும்போது தூய்மைப்பணியை அதிகமாக செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களே பொருளாதார ரீதியாக முன்னிலைக்கு வரமுடியும். […]

தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டியது என்ன? காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு..

மதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் தவெக மாநாட்டுக்கு வரும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம் குறித்தும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக மாநாட்டு திடலில் உள்ள பார்க்கிங் 1க்கு வர வேண்டும். தூத்துக்குடி, விருதுநகரில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக […]

பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது 14.08.2006 அன்று சிறீலங்கா வான்படையினர் நடாத்திய தாக்குதலில் சாவடைந்த 61 மாணவிகளின் 19 ஆவது ஆண்டு நினைவுநாளும் , தாய்த் தமிழகத்தில் தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு பஸ்ரில் பகுதியில் இன்று (14.08.2025) வியாழக்கிழமை பிற்பகல்15.00 மணிக்கு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் […]

வள்ளிபுனம் செஞ்சோலை படுகொலையின் 19 ஆம் ஆண்டு நினைவு!

பாடித் திரிந்த எங்கள் பாசங்கள் ஓடிச்சென்று பங்கருக்குள் புகுமுன் தேடி வந்த கிபீர் குண்டுகள் துடிக்க வைத்து துளைத்துச் சென்றதே வெடித்துச் சிதறிய குண்டால் அடிவயிறும் கிழிந்து பதறிப் பதறியே பயத்தோடே மரணத்தை அடைந்தனரே எம் தேசத்தின் நேசங்கள் சேர்த்து வைத்த ஆசையெல்லாம் கனவாகிப் போக ஓசை இன்றி உடல் மட்டும் உயிரற்று வெறுமையானதே கண்டவை கனவாகி போகாதா கேட்டவை பொய்யாகிப் போகாதா ஏங்கி ஏங்கியே நெஞ்சம் நோகுதே தாங்கித் தாங்கியே வலியும் கூடுதே ஈழத்தின் நாளைய […]

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற செஞ்சோலை நினைவு வணக்க நிகழ்வு!

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் சிறிலங்கா விமானதாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 14..08.2025 வியாழக்கிழமை தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்றது இந்நினைவு நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினர்.

நல்லூரில் வாள் வெட்டு – இளைஞன் காயம் – ஐவர் கைது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவான இன்றைய தினம் சனிக்கிழமை ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அந்நிலையில் , வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி […]

தேரர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   நீதிமன்ற உத்தரவு அபே ஜனபல கட்சியின் பொதுச் செயலாளரைக் கடத்தி அச்சுறுத்தி அக்கட்சிக்கு உரித்தான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பலவந்தமாகப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அதுரலியே ரத்ன தேரருக்கு எதிராக கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   எனினும் குறித்த வழக்கில் முன்னிலையாகாமல் அதுரலியே ரத்ன தேரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகின்றார். இதனையடுத்து […]