யாழில் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மதுரையைக் குறிவைக்கும் பாஜக.. முக்கியமான இரண்டு தொகுதிகளுக்கு டார்கெட்?

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார். அதுமட்டுமின்றி அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அதிகளவில் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியை சார்ந்த பாஜக துணைத்தலைவர் தமிழ்மணி, கலா, ராஜலட்சுமி உள்ளிட்டோரையும், மாநிலகக்குழு உறுப்பினர் மலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் மாலைக்கொடி, […]
டொனால்டு ட்ரம்புவுக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே மோதல்

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர். இதையடுத்து, […]
பிரான்சில் சிறப்படைந்த ரிரிஎன் தமிழ்ஒளியின் ‘ஊரகப் பேரொளி’ 2025 கிராமிய கலை

பிரான்சில் ரிரிஎன் தமிழ்ஒளி தொலைக்காட்சி 6 வது தடவையாக நடாத்திய ‘ஊரகப் பேரொளி” கிராமிய கலை நடனப்போட்டி – 2025 கடந்த 01.06.2025; ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. பிரதம விருந்தினர், நடுவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இன்னியம் இசையுடன் அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு விளக்கினை பிரான்சு ரிரிஎன் இணைப்பாளர் திரு. ஜெயா , பிரான்சு கிளையின் செயற்பாட்டாளர் திருவாட்டி சுபா மோகன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். பின்னர் அகவணக்கம் […]
தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் – செம்மணியில் வெடித்த மக்கள் போராட்டம்!

யாழ் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றையதினம் (05) செம்மணி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 1998-1999 இல் செம்மணி பகுதியில் 300க்கு […]
சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025

பிரான்சு மண்ணிலே தமிழ்மொழி தழைத்தோங்க உழைக்கும் அனைவரதும் ஒருமித்த பங்களிப்புடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2025. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 66 தமிழ்ச்சோலைகளில் பயில்வோர், மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் பயில்வோர்களுடன் தனித்தேர்வர்களுமாக 5718 மாணவர்கள் இத்தேர்வில் தோற்றியிருந்தனர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது […]
அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு சிறப்பாக நிறைவடைந்துள்ளது.

பிரான்சுநாட்டில் முதன்முதலாக அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 07.06.2025 சனிக்கிழமை பொண்டி நகரில் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர். மாணவர்களின் புலன்மொழியாற்றலை மேம்படுத்தும் நோக்கோடு கேட்டல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுத்தாற்றலை மதிப்பிடும் எழுத்துத்தேர்வு என வளர்தமிழ் 1 தொடக்கம் 12 வரையான வகுப்புகளுக்கான மதிப்பீட்டுத்தாள்களைத் தயாரித்தளித்த அனைத்துலக தaமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆதரவுடன் சிறப்படைந்துள்ளது இத்தேர்வு.தேர்வினை மேற்பார்வை செய்ய அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் […]