குருந்தூர்மலை விவசாயிகள் கைது தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று (மே 15) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. இந்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றது. புகாரில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு

இன்றய நாளில் (17.05.2025) மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் மகேந்திரம் ஸ்ரோர்ஸ் அவர்களின் ஒத்துழைப்புடனும் இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது . விடுதலைப்போரில் மரணித்த அத்தனை உறவுகளுக்காகவும் அகவணக்கம் செய்ததோடு நினைவுப் படத்திற்கான மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டது தொடர்ந்து மக்களால் மலர் அஞ்சலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் திரு.வேழமாளிகிர்தன் அவர்களால் நினைவுரை ஆற்றப்பட்டது தொடர்ந்து கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. எத்தனை […]
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இன்று (17.05.2025) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் வந்தாறுமூலை வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. குறித்த நிகழ்வில் வலிந்து காணாமலாகாகப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் என்போர் கலந்துகொண்டனர்.
பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 கவனயீர்ப்பு பதாகைகள்!

இன்று 17.05.2025 சனிக்கிழமை பிரான்சு, பாரிசு லாச்சப்பல் தமிழர் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டினை நினைவில் ஏந்தி அதன் அடையாள சின்னத்தைத் தாங்கிய பதாகைகளை வைத்து கவனயீர்ப்பு நினைவேந்தப்படுகிறது. .மே18 அன்று மதியம் 13.30 மணிக்கு இன உணர்வு கொண்ட தமிழ் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி நீதிக்கான பேரணியில் பங்குபற்றவும் உள்ளனர்.
கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழா தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை விழா – 2025

யேர்மன் நாட்டில் புகழ்பெற்ற நறுமணநீர் நகர் கேளின் மாநகரில், தமிழ் மொழிக்கான ஒரு திருவிழாவைப் பெருவிழாவாகப் பேரவை விழா – 2025 இனை மே மாதம் 3ம் நாள் நடத்திச் சிறப்பித்துள்ளனர் யேர்மன் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். மண்டப வாயிலில் மலர்க்கோலம் இடப்பட்டு, மேசை மீது பித்தளையாலான சிலைகள், நிறைகுடம், விளக்குகள் எனப் பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டு, மலர்களும் பழங்களும் அலங்கரிக்கத் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றி நின்றது […]
பிரான்சில் முள்ளிவாய்க்கால் அவலத்தை கண்முன் கொண்டுவந்த இளையோர்கள்!

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு அரசியல் பிரிவு இளையோர், தமிழ் இளையோர் அமைப்பினருடன் இணைந்து மே 18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டினை முன்னிட்டு “தமிழின அழிப்பின் தடயங்கள் காட்சிப்படுத்தல்” என்னும் தொனிப் பொருளில் முள்ளிவாய்க்கால் அவலங்களை கண்முன் நிறுத்தியிருந்தனர். இன்று– 17 மே 2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு பாரிஸ் நகரில் ( 76, rue saint maur 75011 Paris) குறித்த காட்சிப்படுத்தல் ஆரம்பமாகி இருந்தது. சிறீலங்கா சுதந்திரமடைந்ததன் […]
துருக்கியை புறக்கணிக்க இந்தியாவில் வலுக்கும் குரல்கள் – நிலவரம் எப்படி மாறுகிறது?

துருக்கிக்கு பயணம் மேற்கொள்வதை புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவில் தொடங்கிய பொதுக் கோரிக்கைகள் தற்போது விரிவடைந்துள்ளது. துருக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உள்ள தொடர்புகளையும் இந்தியா துண்டித்து வருகிறது. சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் சண்டையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, ராஜ்ஜீய உறவுகள் பதற்றமடைந்துள்ளன. தேசிய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து, துருக்கிய நிறுவனமான செலிபி, இந்திய விமான நிலையங்களில் செயல்படுவதற்கு இந்தியா தடை விதித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை […]
புளோரிடா விமான நிலையத்தில் தீ விபத்து

அமெரிக்காவில் புளோரிடா விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் ஒன்றான புளோரிடா ஜாக்சன்வில்லா சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ அங்கிருந்த ஏனைய 50க்கும் மேற்பட்ட வாகனங்களிலும் பரவியத்துடன் முதல் தளத்தில் பற்றிய தீ, ஏனைய தளங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தை அடுத்து உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டதுடான் தீ விபத்தின் எதிரொலியாக 30க்கும் […]
கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான இளம் வர்த்தகர்

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி – கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக […]