மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள்

தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று பிற்பகல் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், ரணிலின் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் பரப்பில் பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிவேண்டி ஐக்கிய தேசியக் கட்சியினர் பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, கொள்ளுப்பிட்டி  விகாரையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பெருமளவான ஐ.தே.கவினர் மற்றும் ரணில் ஆதரவாளர்கள்  உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date