மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று ரயில் மறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று (19) தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மாலை 4:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்..

 

மீனவர்களுடன் ராமேஸ்வரம் வட்டார ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மணோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று (18) நடைபெற்றது.

 

ஆனால் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்து எழுந்து சென்றனர்.

 

கூட்டத்தை விட்டு வெளியே வந்த மீனவர்கள் திட்டமிட்டபடி நாளை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date