மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை, தேனி, சிவகங்கை, மற்றும் நெல்லையை சேர்ந்த மண்டல தலைவர்கள் முதல் மாவட்ட பொதுச்செயலாளர்கள் வரையிலான பல்வேறு கட்ட நிர்வாகிகளைச் சந்திக்கிறார்.

அதுமட்டுமின்றி அதிமுக மூன்று முறை வெற்றி பெற்றுள்ள மதுரை மேற்கு தொகுதியில் பாஜக நிர்வாகிகளை அதிகளவில் அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியை சார்ந்த பாஜக துணைத்தலைவர் தமிழ்மணி, கலா, ராஜலட்சுமி உள்ளிட்டோரையும், மாநிலகக்குழு உறுப்பினர் மலைச்செல்வி, மாவட்ட செயலாளர்கள் மாலைக்கொடி, மகேஸ்வரி என மேற்கு தொகுதியில் மட்டும் 6 நிர்வாகிகளை சந்திக்கிறார். அதேபோல திமுக அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து வெற்றி பெறும் மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளான மாவட்ட துணைத்தலைவர் சித்ராதேவி, வெற்றி செல்வி, மாவட்ட செயலாளர்கள் மணிமேகலை, ஜெயந்தி உள்ளிட்ட 4 நிர்வாகிகளை சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார்.