மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுச்சுடரைத் தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் உயிர்கொடுத்தவர்களின் உறவுகள் உள்ளிட்ட அனைவரும் நினைவுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் மாநகரமுதல்வர்,துணைமுதல்வர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு நினைவேந்தி உரை ஆற்றியிருந்தனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date