செம்மணி மனித புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.