மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

சதாசிவ_பண்டாரத்தார் அவர்களின் 133 ஆம் ஆண்டு அவதார நன்னாள் -16.09.2025

ஆதித்த கரிகாலசோழன் படுகொலை மர்மத்தை உடைத்த காட்டுமன்னார்கோயில் – உடையார்குடி கல்வெட்டை கண்டறிந்து தமிழ் உலகிற்கு தந்தவர்…!
ஏழத்தாழ 8000 தமிழ் கல்வெட்டுகளை நேரடியாக படித்து ஆராய்ந்தவர்…!
சோழ மன்னர்களின் முழுமையான வரலாற்றினை எழுதி வெளியிட்ட முன்னவர்…!
வீரசோழப் பேரரசு
மீண்டு எழ வழிவகுத்த #திருப்புறம்பியம்_பெரும்போர் என வரலாற்றாளர்களால் போற்றப்படும், அதி முக்கிய வரலாற்று போர் நடந்த திருப்புறம்பியம் கிராமத்தில் தோன்றியவர்.
“ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் உண்மை வரலாறு அதன் தாய் மொழியிலேயே எழுதப்படுதல் அவசியம்” என்கிற கருத்தை உறுதியாக கொண்டிருந்த பண்டாரத்தார், தனது நோக்கத்தை நிறைவேற்றிடும் கனவை சுமந்து தன் வாழ்நாள் முழுமையையும் இதற்காகவே அர்ப்பணித்தார் என்பது கொண்ட கொள்கையில் எவ்வளவு அறமும் நெறியும் ஒழுக அவர் வாழ்ந்திருந்தார் என்பதற்கு தக்க சான்று.
வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர், ஆராய்ச்சி பேரறிஞர் திருப்புறம்பியம் #சதாசிவ_பண்டாரத்தார் அவர்களின்
133 ஆம் ஆண்டு அவதார நன்னாளான இன்று அவர்தம் அடியை பற்றி தமிழ் தலைமுறை தழைக்கட்டும்.
நன்றி
பெரும்பள்ளி இராசராச சோழன்
சதாசிவ பண்டாரத்தார் குறித்த ஆவணப் படம் காண…👇

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date