முல்லைத்தீவு குருந்தூர்மலை பகுதியில், மே 10ஆம் திகதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துக்கொண்டிருந்த இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முதலில் மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று (மே 15) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. இந்த கைது, குருந்தூர்மலை விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சந்தபொதி தேரர் தொல்பொருள் திணைக்களத்திடம் அளித்த புகாரை தொடர்ந்து இடம்பெற்றது. புகாரில், விவசாயிகள் தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.