மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

எதிர்கால போர்களுக்காக சிறுவர்களை ராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருகிறது ரஷ்யா.

ராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் எதிர்கால போர்களுக்காக சிறுவர்களை ராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருகிறது ரஷ்யா.

ரஷ்யாவில் பதின் வயதில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுவது கவனம் ஈர்ப்பதாக உள்ளது. உண்மையான துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி, கையெறி குண்டு வீசுவது ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன, இது தவிர ராணுவத்தினருக்கான உடற்பயிற்சிகளும் தற்போதே தரப்படுகின்றன.

உக்ரைனுடன் 3 ஆண்டுகளாக போராடி வரும் ரஷ்யா ராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் திணறி வருகிறது. தனியார் பாதுகாப்பு படையினரும் சண்டையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வடகொரியாவும் தனது ராணுவ வீரர்களை கொடுத்து உதவியுள்ளது.

ரஷ்யாவில் படிப்பு போன்றவற்றுக்காக வந்துள்ளவர்களும் வலுக்கட்டாயமாக ராணுவ பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் எதிர்கால போர்களுக்காக இப்போதே சிறாரை ரஷ்யா தயார் படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date