மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

மாற்றத்திற்கான ஒளடதம் பனசீயா தமிழ்

இரு குழுக்களுக்கு இடையே மோதல்-கொல்லப்பட்ட இளைஞன்

புத்தளம், கல்பிட்டியில் இரு குழுக்களுக்கு இடையே நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்தவர் உட்பட 5 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக மோதிக்கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கல்பிட்டியை சேர்ந்த 37 வயதுடைய நபராகும். குறித்த நபர் கல்பிட்டி ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சடலம் சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களை கைது செய்ய கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விளம்பரங்கள்

வாழ்த்துமாலை

மரண அறிவித்தல்

Test Name of the Person

Test Place

Test Date