இன்றய நாளில் (17.05.2025) மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் மகேந்திரம் ஸ்ரோர்ஸ் அவர்களின் ஒத்துழைப்புடனும் இரணைமடு இளைஞர்களின் பங்களிப்போடும் முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது .
விடுதலைப்போரில் மரணித்த அத்தனை உறவுகளுக்காகவும் அகவணக்கம் செய்ததோடு நினைவுப் படத்திற்கான மலர்மாலைகளும் அணிவிக்கப்பட்டது தொடர்ந்து மக்களால் மலர் அஞ்சலி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் திரு.வேழமாளிகிர்தன் அவர்களால் நினைவுரை ஆற்றப்பட்டது தொடர்ந்து கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எம் இனத்தின் வலிகளை நாம் பட்ட துன்பங்களை எம் இளய சமூகத்திடம் கூறிச்செல்வோம் .
இது வெறும் கஞ்சியல்ல இறுதிநேரத்தில் எம் உயிரைக் காத்துநின்ற அமிர்தம்.




